கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் போது நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

கோவையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு மோதி ரகு என்ற மென்பொறியாளர் உயிரிழந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 23

கோவையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு மோதி ரகு என்ற மென்பொறியாளர் உயிரிழந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்தி முடித்துள்ளது தமிழக அரசு. ஆனால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. கோவையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு மோதி ரகு என்ற மென்பொறியாளர் உயிரிழந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இதுதொடர்பாக கோவை, சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், ரகு உயிரிழப்புக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஏசுதாஸ் உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார்.

அதன்படி, உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரகுவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து டேனியல் ஏசுதாஸ் கூறுகையில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பொது இடங்களில் பேனர் வைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதேபோல, ஏற்கெனவே இருந்த அண்ணா சிலையை பெயர்த்துவிட்டு, அதே இடத்தில் புதிதாக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவை அனைத்திலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அதிகாரிகள் மீறியுள்ளனர். அதனால், அப்பாவி இளைஞரின் உயிர் பறிபோகியுள்ளது என்றார்.

இந்த வழக்கு, அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...