​பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்வு!

தமிழகத்தில் தற்போது 6 ஆண்டுகளுக்கு பின்னர் அரசுப் பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம், நாளை (ஜனவரி 20) முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோவை, ஜனவரி 19

தமிழகத்தில் தற்போது  6 ஆண்டுகளுக்கு பின்னர் அரசுப் பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம், நாளை (ஜனவரி 20) முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் இந்த கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்துள்ளபடி கட்டண விபரம்:-

புறநகர் பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.5-லிருந்து ரூ.6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மாநகர குளிர்சாதன பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புறநகர் விரைவுப்பேருந்தில் அதிகபட்ச கட்டணம் ரூ.17-லிருந்து ரூ.24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வால்வோ பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.33லிருந்து ரூ.51 ஆகவும், மாநகர, நகர பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.3லிருந்து ரூ.5 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

குளிர்சாதனப் பேருந்துகளுக்கான கட்டணம் 30 கி.மீ-க்கு ரூ.27லிருந்து ரூ.42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்துடன் மலைப்பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்கு மட்டும் 20 சதவிகிதம் கூடுதலாக வசூலிக்கப்படும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிகைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களது கோரிக்கைகள் சிலவற்றை தமிழக அரசு நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...