பயணிகளை மதிக்காத சில தனியார் பேருந்து நடத்துநர்கள்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்குகின்றன. இவற்றில் சில தனியார் பேருந்துகளில் நடத்துநர்கள் பயணிகளை மதிப்பதே இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவை, ஜனவரி 18

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்குகின்றன. இவற்றில் சில தனியார் பேருந்துகளில் நடத்துநர்கள் பயணிகளை மதிப்பதே இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேட்டுப்பாளையம் முதல் கோவை வரையிலான 40 கிலோ மீட்டர் பயணத்தில் பொதுமக்கள் வேலைக்காக பல்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து கோவைக்கு வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலும் நடுத்தர வயதினர் தான் அதிக அளவில் பயணம் செய்கின்றனர்.

இதனிடையே பயணிகள் சில்லரை கொடுக்க முடியாமல் போனாலோ அல்லது அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் இறங்க உள்ள நிலையில் பேருந்து இருக்கையில் அமர்ந்தாலோ அவர்களை சில தனியார் பேருந்து நடத்துநர்கள் மிகவும் கடுமையான வார்த்தைகளால் வசைபாடுவது வழக்கமாக உள்ளது.

இது குறித்து பேருந்து பயணி செல்வராஜ் கூறுகையில், "மாணவர்கள், இளைஞர்கள் போன்றவர்களை பார்த்தாலே ஒருமையில் தான் நடத்துநர்கள் பேசுகிறார்கள். வயதானவர்கள் பேருந்தில் படிக்கட்டில் ஏறும்போது அல்லது இறங்கும் போது தாமதம் ஆனால் ஒருமையில் மிகவும் மோசமாகப் பேசுகின்றனர். அதிகாரிகள் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

அரசு பேருந்து நடத்துநர்கள் சிலர் பயணிகளிடம் கடுமையாக நடந்துகொண்டாலும் சில தனியார் பேருந்து நடத்துநர்கள் போல நடந்துகொல்வதில்லை என மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் குப்புராஜ் கூறுகையில், "தனியார் பேருந்துகளில் பெரும்பாலும் அனுபவம் இல்லாத சிறு வயது இளைஞர்களையே பணிக்கு நியமனம் செய்கின்றனர். அவர்கள் பொறுமையில்லாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அரசு பேருந்துகளில் அனுபவம் மிக்கவர்கள் உள்ளனர். ஆனாலும் அவர்கள் சில நேரம் கடுமையாகத்தான் நடந்துகொள்கின்றனர். போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பயணிகள் புகார் அளிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர் கூறுகையில், "பயணிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு தருவது இல்லை. 5 ரூபாய் பயணச்சீட்டுக்கு 10 அல்லது 20 ரூபாய் பணம் தருவர். ஒருவர் தந்தால் பரவாயில்லை, எல்லாரும் அப்படிதான் தருகிறார்கள். படியில் பயணம் செய்யவே விரும்புகிறார்கள். இதன் காரணமாகவே கடுமையாக நடந்துகொள்ள வேண்டியுள்ளது. பயணிகள் ஒத்துழைப்பு இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை" என்றார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...