கோவை, திருச்சி சாலையில் அல்வேர்னியா மெட்ரிகுலேசன் பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை 2500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை சுமார் 3.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் இருந்த பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்தது.
கோவை, ஜனவரி 17

குழந்தைகளை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் வெளியே காத்திருந்த நிலையில், மரம் விழுந்ததைக் கண்ட அவர்கள் பதற்றமடைந்து பள்ளி வளாகத்தின் உள்ளே சென்றனர். அதிர்ஸ்டவசமாக மாணவிகள் யாரும் வகுப்பறையில் இருந்து வெளியேறாத காரணத்தால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.
இது குறித்த தகவலறிந்த பள்ளி முதல்வர் அங்கு வந்து பார்வையிட்டார். பின்னர், மாற்று வாசல் வழியாக மாணவிகள் அனைவரும் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால் அந்தப் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.