கோவையில் உள்ள ஏரி மற்றும் குளங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறுதுளி அமைப்பின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
கோவை, ஜனவரி 12

கோவையின் சிறப்புகளை பறைசாற்றும் விதமாக கடந்த 5-ம் தேதி தொடங்கிய ”கோவை விழா 2018” இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த ஒருவார காலமாக, உணவுத்திருவிழா மற்றும் டபுள்டக்கர் பேருந்து என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும், ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
இதன் ஒருபகுதியாக, கடந்த 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை கோவையின் சிறப்புகளை உணர்த்தும் விதமாக புகைப்படப் போட்டி நடத்தப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், கோவை விழாவின் இறுதிநாளான இன்று, சிறுதுளி அமைப்பின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. அதில், புகைப்படப் போட்டியில் இடம்பெற்றிருந்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அதில், கோவை மாவட்டத்தில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளின் தற்போதைய நிலைமை குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிகழ்ச்சி குறித்து சிறுதுளி அமைப்பினர் பேசுகையில், கோவையில் உள்ள ஏரி மற்றும் குளங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. என்றனர்.