ஏரி, குளங்களைப் பேணிகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் புகைப்படக் கண்காட்சி

கோவையில் உள்ள ஏரி மற்றும் குளங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறுதுளி அமைப்பின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

கோவை, ஜனவரி 12

கோவையில் உள்ள ஏரி மற்றும் குளங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறுதுளி அமைப்பின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. 



கோவையின் சிறப்புகளை பறைசாற்றும் விதமாக கடந்த 5-ம் தேதி தொடங்கிய ”கோவை விழா 2018”  இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த ஒருவார காலமாக, உணவுத்திருவிழா மற்றும் டபுள்டக்கர் பேருந்து என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும், ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. 

இதன் ஒருபகுதியாக, கடந்த 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை கோவையின் சிறப்புகளை உணர்த்தும் விதமாக புகைப்படப் போட்டி நடத்தப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், கோவை விழாவின் இறுதிநாளான இன்று, சிறுதுளி அமைப்பின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. அதில், புகைப்படப் போட்டியில் இடம்பெற்றிருந்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அதில், கோவை மாவட்டத்தில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளின் தற்போதைய நிலைமை குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. 

இந்த நிகழ்ச்சி குறித்து சிறுதுளி அமைப்பினர் பேசுகையில், கோவையில் உள்ள ஏரி மற்றும் குளங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. என்றனர். 

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...