வால்பாறை அருகே சிறுத்தை தாக்கி காளை மாடு பலி

வால்பாறை அடுத்த சவரங்காடு எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கி காளை மாடு உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கோவை, ஜனவரி 12

வால்பாறை அடுத்த சவரங்காடு எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கி காளை மாடு உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வால்பாறை அடுத்த காமராஜநகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர், தனது கால்நடைகளான பசு மற்றும் காளை மாடுகளை அருகில் உள்ள எஸ்டேட் பகுதியில் உணவிற்காக மேயவிடுவது வழக்கம். 

இவ்வாறு நேற்று எஸ்டேட் பகுதியில் மாடுகள் சென்றிருந்த நிலையில் மாலை காளை மாடு மட்டும் திரும்பி வரவில்லை. இதனைத்தொடர்ந்து, அன்பழகன் அருகில் உள்ள சவரங்காடு எஸ்டேட் பகுதியில் தேடியபோது அங்கு மாடு கழுத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடப்பது கண்டறியப்பட்டது.



இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரி சக்திவேல் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டார். அப்போது, சிறுத்தையின் காலடித் தடங்கல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சிறுத்தை தாக்கியதாலேயே காளை மாடு உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது.

இதனிடையே சவரங்காடு எஸ்டேட் பகுதி மக்கள், இந்த சிறுத்தை கடந்த சில நாட்களாக குடியிருப்புகளின் அருகில் சுற்றித் திரிவதாகவும், இதனால் மனித உயிரிழப்புகள் ஏற்படும் முன் அதனைக் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் எனவும் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...