மூதாட்டி கொலையை விசாரிக்க இரண்டு தனிப்படை அமைத்தது மாநகர காவல்துறை

கோவையில் மூதாட்டியைக் கொலை செய்து 17 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைப் பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 11

கோவையில் மூதாட்டியைக் கொலை செய்து 17 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைப் பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

செல்வபுரம், தேவேந்திர வீதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி ராமாயி அம்மாள் (75). கணவர் இறந்துவிட்ட நிலையில் ராமாயி அம்மாள் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சோதனை மேற்கொள்கையில் ராமாயி அம்மாளின் காது, மூக்கு ஆகிய இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருந்ததைக் கொண்டு அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். மேலும், பீரோவில் இருந்த 17 பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து, தற்போது இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து மாநகர காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...