உதகையில் முக்கிய வீதிகளில் உலா வந்த காட்டெருமையால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

உதகையில் முக்கிய வீதிகளில் உலா வந்த காட்டெருமையை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.


நீலகிரி, ஜனவரி 10

உதகையில் முக்கிய வீதிகளில் உலா வந்த காட்டெருமையை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



மலைகளின் அரசி என அழைக்கப்படும்  உதகையில் உள்ள தொட்டபெட்டா வனப்பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழிதவறி வந்த  காட்டெருமை ஒன்று பல நாட்களாக தாவரவியல் பூங்கா பகுதியில் உலா வந்தது.

இந்நிலையில் இன்று இரவு தாவரவியல் பூங்கா அருகே  வந்த காட்டெருமை, சேரிங்கிராஸ் வழியாக மார்க்கொட் சென்று பேருந்து நிலையம் வரை உலா வந்தது. 

காட்டெருமையை கண்டு பீதியடைந்த அப்பகுதி பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். இதனால் உதகையில் இரவு நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...