உடல்பருமனுள்ள குழந்தைகளை கிண்டலடிக்கக்கூடாது : மாணவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அறிவுரை

உடல் பருமனாக இருப்பவர்களை விமர்சிக்கவோ, கிண்டலடிக்கவோ கூடாது என பள்ளி மாணவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை, ஜனவரி 09

உடல் பருமனாக இருப்பவர்களை விமர்சிக்கவோ, கிண்டலடிக்கவோ கூடாது என பள்ளி மாணவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். 



இளம் தலைமுறைகளிடையே உடல் பருமனைத் தடுக்கும் வகையில், யங் இண்டியன்ஸ் மற்றும் ஜெம் மருத்துவமனை இணைந்து ”பள்ளிக் குழந்தைகளின் பருமன் தடுப்பு” (COPS) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு ஆர்க் பவுண்டேஷன் மற்றும் கோவை மாநகராட்சி முழு ஆதரவை அளித்துள்ளனர். 

இந்த நிலையில், ”கோவை விழா 2018”-ஐ யொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகக் கோவை வந்த நடிகர் சிவகார்த்திகேயன், வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசுகையில், ” மாணவர்கள் ஜங் உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். நான் குளிர்பானத்தை குடிப்பதை விட்டு 7 அல்லது 8 ஆண்டுகள் ஆகின்றன. குளிர்பானத்தின் நன்மை, தீமை தெரியாததால், அது தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மறுத்தேன். என்றார். 

இதைத் தொடர்ந்து, உடல்பருமனுக்கு எதிரான உறுதிமொழியை நடிகர் சிவகார்த்திகேயனுடன் 5,000 மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர். 



” மாணவர்கள் நலமான வாழ்க்கை முறை வாழவேண்டும். தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்” எனக் கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் கூறினார். 

நிகழ்ச்சியின் இறுதியில், வாழ்க்கை முறை குறித்த ’Unsung Heroes’ என்ற காலாண்டர் வெளியிடப்பட்டது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...