கொடிநாளையொட்டி ராணுவ வீரர்களுக்கு 25,000 பேனாக்களை வழங்கிய ஜிஎம் பென்ஸ் நிறுவனம்

கொடிநாளையொட்டி ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக ராணுவ அமைச்சரிடம் 25,000 பேனாக்களை ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் வழங்கியது


கோவை, ஜனவரி 08

கொடிநாளையொட்டி ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக ராணுவ அமைச்சரிடம் 25,000 பேனாக்களை ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் வழங்கியது

நாடு முழுவதும் 1949-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் தேதி தியாகிகள் மற்றும் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக கொடிநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி, நன்கொடைகள் பெறப்பட்டு, அதன்மூலம் முன்னாள் ராணுவ வீரர்கள், ஊனமுற்ற வீரர்கள், பணியின் போது வீரமரணம் அடைந்த வீரர்களின் மனைவிகள், தியாகிகளின் வாரிசுகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த கொடிநாளையொட்டி நன்கொடை பெறுவதை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊக்குவித்து வருகிறார்.

தற்போது, தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 30-ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது, ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக ராணுவ அமைச்சரிடம் 25,000 பேனாக்களை ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் வழங்கியது. இதற்கான, காசோலையை, ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் இந்திரக்குமார் மகேந்திரன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அளித்தார். 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...