சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம் வெளியீடு



கோவை, ஜனவரி 7




சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம், சிற்றேடு மற்றும் நல்கை கோரிக்கை வெளியீட்டு விழா K'sir's பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், காங்கயம் கால்நடைகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி (SKCRF) மையத்தின் புதிய இணையதளத்தை, புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.



இவ்விழாவில், நிர்வாக அறங்காவலர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்புரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து, கெளமார மடாலய தவத்திரு குமரகுருபர சுவாமிகள் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். ராதாகிருஷ்ணன் பேசியதாவது, 'தமிழகத்தில் நாட்டு மாடுகளின் முக்கியத்துவத்தை சமீபகாலமாக அனைவரும் உணர்ந்து வருகின்றனர். இதற்கு, சென்ற வருடம் நடத்தப்பட்ட இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டமும், சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக அறங்காவலர் திரு. கார்த்திகேய சிவசேனாபதியின் சட்டபோராட்டமும் முக்கிய காரணங்கள்.' என்று பாராட்டினார்.



இதைத்தொடர்ந்து, சிறுதுளியின் நிர்வாக இயக்குநரும், ப்ரிக்கால் நிறுவனத்தின் தலைவருமான திருமதி. வனிதா மோகன், சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் சிற்றேட்டினை வெளியிட முதல் பிரதியை, வெற்றி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், கிளாசிக் போலோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், திரு. டி.ஆர். சிவராம் பெற்றுக்கொண்டார். அறக்கட்டளையின் நல்கை கோரிக்கையை திரு. டி.ஆர். சிவராம் வெளியிட, புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.



விழாவில், 'மரங்களும் மனிதர்களும்' என்ற தலைப்பில், வனத்துக்குள் திருப்பூர் இயக்கத்தின் இயக்குநர் திரு. குமார் துரைசுவாமி உரையாற்றினார். பின்பு, 'பள்ளியில் நாட்டு இன கால்நடை வளர்ப்பு' என்னும் தலைப்பில், கெளமாரம் சுஷீலா பன்னாட்டு உறைவிட பள்ளியின் செயலாளர் திருமதி. லலிதா பிரகாஷ் உரையாற்றினார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையதளத்தைப் பற்றி, நிர்வாக அறங்காவலர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி கூறுகையில், 'புதுப்பிக்கப்பட்டுள்ள இணையதளத்தில் கால்நடை வளர்ப்பு பற்றிய ஏராளமான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை, இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அறிமுகம் செய்யப்பட்ட சில மணிநேரத்தில், ஏராளமான இளைஞர்கள் இணையத்தைப் பார்வையிட்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.



மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகிறோம்' என்றார்.

விழாவில், K'sir's பள்ளி மாணவர்களின் இசைக் குழு, ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'டக்கரு டக்கரு' பாடலையும், K'sir's பள்ளியின் 10ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் பாடலையும் இசைத்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...