தினகரனை பார்த்து எம்எல்ஏக்கள் எழுந்து நிற்க வேண்டிய நிலை விரைவில் வரும் : நாஞ்சில் சம்பத்


கோவை, ஜனவரி 05

டிடிவி தினகரனை பார்த்து எழுந்து நிற்க வேண்டிய நிலை அதிமுக எம்.எல்.ஏ களுக்கு விரைவில் வரும் என கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு மசோதா எனும் பெயரில் ஷரியத் சட்டத்தில்  மத்திய அரசு கை வைப்பதை கண்டித்து கோவை கோட்டைமேடு வின்செண்ட் சாலையில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட  ஜமா அத்துல் உலமா சபை சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்,  டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பங்கேற்கும் முன்பு அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கையில், 

முத்தலாக் சட்ட மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுக்கு அனுப்ப தொடர்ந்து வலியுறுத்த பட்ட பின்னரும், மத்திய அரசு அனுமதிக்க மறுக்கின்றது.  தினகரன் சட்டமன்றத்தில் வரும் 8 ம் தேதி  நுழையும் போது யாரும் எந்திரிக்க கூடாது என அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், தினகரனை பார்த்து எழுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஜெயலலிதாவின் வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை அரசுடமை ஆக்குவதில் மாற்றுக்கருத்தில்லை.  அதே வேளையில், ரத்த சம்மந்தப்பட்ட வாரிசுகளின் கருத்துகளையும் தமிழக அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். என்றார்.

Newsletter

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...