கோவை, ஜனவரி 05
கடினஉழைப்பும், விடா முயற்சியும் வெற்றிக்கு வித்திடும் என உலகின் இளம் செயற்கை நுண்ணறிவு நிபுணர் டன்மை பக்ஷி கூறினார்.
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ”கெட் இன்பயர்ட் பை டன்மை பக்ஷி” என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் அறநிலையத்தின் தலைமை வணிக அதிகாரி சுவாதி ரோஹித் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக, உலகின் இளம் செயற்கை நுண்ணறிவு நிபுணர் டன்மை பக்ஷி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் டன்மை பக்ஷி பேசுகையில், ”கடினஉழைப்பும், விடா முயற்சியும் வெற்றிக்கு வித்திடும். நாம் எதில் பேரார்வம் கொண்டுள்ளோம் என்பதை தெரிந்து பின்தொடர்ந்தால் வெற்றி நிச்சயம்.” என்றார். மேலும், புதிய தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு பற்றியும், நரம்பியல் உலைஅமைப்புகள் பற்றியும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, எஸ்.என்.ஆர் அறநிலையத்தின் கல்வி இயக்குநர் எபினேசர் ஜெயக்குமார் பாராட்டுரையும், நன்றியுரையும் வழங்கினார். இவர் டன்மைபக்ஷியின் இளம் வயது சாதனைகளுக்காக அவரைப் பெரிதும் பாராட்டினார்.