சொத்துக்காக பெற்றோரை கொன்ற மகன் கைது

திருப்பூர் ஜனவரி 5

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தோட்டத்தில் தனியாக இருந்த கணவன் மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்- சொத்துக்காக மகனே தாய் தந்தையரை கொடூரமாக கொலை செய்து  நாடகமாடியது அம்பலம்.கொலை வழக்கில் மகன் உட்பட 3 பேர் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை

திருப்பூர் மாவட்டம் காங்க்யத்தை அடுத்த மிதிப்பாறையை அடுத்துள்ளது சூலக்கல் புதூர். இப்பகுதியில் உள்ள தோட்டத்து சாலையில் வசித்துவருபவர் பழனிச்சாமி, 60 வயதான பழனிச்சாமி தனது மனைவி கண்ணம்மாளுடன் வசித்துவந்துள்ளார். 

மேலும் விவசாயியான பழனிச்சாமி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு சொந்தமான 22 ஏக்கர் தோட்டத்தில் மாந்தோப்பை பராமரித்து வந்துளளார். மேலும் தம்பதியருக்கு பெரியசாமி என்கிற மகனும், கண்ணம்மாள் எப்கிற மகளும் உள்ள நிலையில் இருவரும் திருமணமாகி திருப்பூர் வாய்க்கால் மேட்டில் பகுதியில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் தனியாக வசித்து வந்த தம்பதியரின் வீட்டிற்கு இன்று காலை சென்ற பால்காரர் வீட்டின் முன்புறமாக கண்ணம்மாள் மற்றும் கணவர் பழனிச்சாமி ரத்தவெள்ளத்தில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்தார்.

 இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே முதல்கட்ட விசாரணையில் தனியாக தோட்டத்து சாலையில் இருந்த தம்பதியரை நோட்டமிட்டு பின்னர் இரவு சுமார் 11 மணி அளவில் தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் வெளியில் கயிற்று கட்டிலில் தூங்கி கொண்டிருந்த பழனிச்சானியை கொடூரமாக அரிவாளால் தலையில் இரண்டு இடங்களில் கொடூரமாக வெட்டியுள்ளனர். மேலும் இவரது மனைவி கண்ணம்மாளையும் வெட்டி கொலை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. 

போலீசாரின் தீவிர விசாரணையில் சொத்து சம்பந்தமாக பழனிச்சானிக்கும் அவரது மகனுக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிய வந்தது.மேலும் தோட்டத்தில் வேலைபார்ர்து வந்த யுவராஜ் மற்றும் கார் டிரைவர் நாகராஜ் ஆகிய இருவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் பெற்ற மகனே தாய் தந்தையரை கொன்று நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. 

தந்தைக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்த்திற்கு ஆசைபட்டு இது குறித்து பழனிச்சாமியிடம் பெரியசாமி கேட்டதற்கு மறுத்துவிடவே, இதனால் ஆத்திர்மடைந்து தோட்டத்த்தில் வேலை செய்யும் யுவராஜ் மற்றும் கார் ஓட்டுனர் நாகராஜ் ஆகிய இருவரையும் வைத்து தந்தையை கொலைசெய்ய திட்டமிட்டுந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் இதனை மறைக்க திருச்செந்தூருக்கு செல்வதாக கூறி இரவே பெரியசாமி சென்ற நிலையில் காலை ஒன்றுமே நடக்காதது போல் பெற்றோர் இருவரும் கொலையான இடத்தில் அழுதுகொண்டே நாடகமாடியுள்ளார். இருவரின் வாக்குமூலத்தின் முலம் முருகேசை கைது செய்த போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பெற்ற மகனே சொத்துக்காக தாய் தந்தையரை கொடூரமாக ஆட்களை வைத்து கொலை செய்த சம்பவம் பொதுமக்களிடையெந் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...