வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சு நடத்த வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
ஜனவரி 05

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடப்பு விவகாரங்கள் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்த நடிகர் கமல், மீண்டும் அரசியல் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கி உள்ளார். இந்த நிலையில் வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வரும் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் குறித்து முதலமைச்சருக்கு டுவிட்டர் மூலமாக நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது, மக்களின் இன்னல்களையும், தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் மனதில் கொண்டு பேச்சு நடத்த வேண்டும். பிரச்சனையை தீர்ப்பதே பொங்கலுக்கு அரசு தரும் விலை மதிப்பில்லா பரிசாகும். இவ்வாறு கூறியுள்ளார்.