அரசு கட்டணத்திற்கு எதிராக தன்னிச்சையாக மீட்டர் கட்டணத்துடன் இயங்கும் ஆட்டோக்கள்

ஆட்டோக்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு எதிராக கோவையில் தொழிற்சங்கங்களே தன்னிச்சையாக மீட்டர் கட்டணத்தை நிர்ணயித்து, ஆட்டோக்களை இயக்கத் தொடங்கியுள்ளனர்.

கோவை, ஜனவரி 04

ஆட்டோக்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு எதிராக கோவையில் தொழிற்சங்கங்களே தன்னிச்சையாக மீட்டர் கட்டணத்தை நிர்ணயித்து, ஆட்டோக்களை இயக்கத் தொடங்கியுள்ளனர். 

கோவையில் ஆட்டோ மீட்டர் கட்டணமாக குறைந்தபட்சம் ரூ. 25 எனவும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 12 எனவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அரசு நிர்ணயித்தது. இக்கட்டணத்திற்கு எதிராக அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் தன்னிச்சையாக கூடுதல் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளனர். குறைந்தபட்சம் ரூ. 30 எனவும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 15 எனவும் தொழிற்சங்கங்கள் முடிவு செய்து ஆட்டோக்களை இன்று முதல் இயக்கத் துவக்கினர்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் அரசு மீட்டர் கட்டணத்தை உயர்த்ததால் தொழிற்சங்கங்களே கட்டணத்தை உயர்த்தியதாகத் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்தக் கட்டண நிர்ணயித்த அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்திய அவர்கள், கட்டண உயர்வை கடைபிடிக்கும் ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்ய முயன்றால் முற்றுகை போராட்டம் நடத்தப்படுமென தெரிவித்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...