இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

ஜனவரி 04

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 84 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. நல்லெண்ண அடிப்படையில் மீனவர்களை விடுதலை செய்கின்றனர். ஆனால், படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இன்று காலை மீன்பிடிக்கச் சென்ற 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: இன்று காலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்கள் உள்பட இலங்கை சிறைகளில் உள்ள 84 மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 159 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும்.

எனவே, இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்கள், அவர்களது படகுகளை தாமதமின்றி விடுவிக்கத் தேவையான நடவடிக்கையை இலங்கை அரசுடன் பேசி மேற்கொள்ளும்படி, வெளியுறவுத் துறைக்கு தாங்கள் அறிவுறுத்த வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இலங்கை அரசால் சமீபத்தில் 79 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...