கோவையில் பூத்துக்குலுங்கும் நிஷாகாந்தி பூ: ஆச்சர்யத்துடன் கண்டுரசிக்கும் பொதுமக்கள்

இமயமலையில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் எனப்படும் நிஷாகந்தி பூ கோவையில் பூத்துள்ளது. இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.


கோவை, டிசம்பர் 28

இமயமலையில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் எனப்படும் நிஷாகந்தி பூ கோவையில் பூத்துள்ளது. இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

கேக்டஸ் எனப்படும் வகை செடிகள் தண்ணீர் மிகக்குறைவாக உள்ள இடங்களில் மட்டுமே வளரும் தன்மையுடையவை. குளிர் அதிகம் உள்ள இமயமலை போன்ற பகுதிகளிலும் இதுபோன்ற பல்வேறு வகையான கேக்டஸ் செடிகள் உள்ளன. இவற்றுள் ஒன்று பிரம்ம கமலம் என அழைக்கப்படும் நிஷாகந்தி பூவாகும். தற்போது, பரவலாக பல்வேறு இடங்களிலும் இந்த வகைசச் செடிகள் அழகுக்காக வளர்க்கப்பட்டு வருகின்றன.

கோவை கவுண்டம்பாளையம் முத்துநகர் பகுதியைச் சேர்ந்த பிரசன்னதேவி என்பவர் அத்தகைய ஒரு செடியை கடந்த 4 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். இந்நிலையில் இரவில் மட்டுமே பூக்கும் இந்த செடியில் பூ ஒன்று பூத்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரம்மன் படுத்திருக்கும் போது நாகம் ஒன்று படமெடுக்கும் நிலையில், இந்த பூவின் நடுப்பாகம் அமைந்திருக்கும் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும். இதனை அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

Newsletter

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...