சுரங்கப்பாதை அமைக்காததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பீளமேடு பகுதி மக்கள்

ரயில்வே மேம்பாலத்தில் சுரங்கப்பாதை அமைக்காத ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து பீளமேடு பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை, டிசம்பர் 28

ரயில்வே மேம்பாலத்தில் சுரங்கப்பாதை அமைக்காத ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து பீளமேடு பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, பீளமேடு பகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ரயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவடைந்து, கடந்த டிசம்பர் 3-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க சுரங்கப்பாதை அமைக்கப்படுமென சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்திருந்த போதும், இதற்கான பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை.



இந்நிலையில், இதனைக் கண்டித்து முருகன் நகர், ஹட்கோ காலனி உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றி இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுரங்கப்பாதை அமைக்காததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், சுரங்கப்பாதை பணிகளை உடனடியாக துவக்கவில்லை எனில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...