ராஜஸ்தானில் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் : உண்மையை வெளியிட்டது தமிழக காவல்துறை

டிசம்பர் 26

ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையனை பிடிக்கச் சென்றபோது உடன்சென்ற ஆய்வாளர் முனிசேகர் தவறுதலாக சுட்டதில் மதுரவாயல் ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணம் அடைந்ததாகத் தமிழக காவல்துறை இன்று அறிவித்துள்ளது.

சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான நாதுராம் உள்ளிட்ட 2 பேரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கடந்த 8-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் சென்றனர். கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர், மதுரவாயல் ஆய்வாளர் பெரியபாண்டியன், போலீஸ் ஏட்டுகள் எம்புரோஸ், குருமூர்த்தி, முதல்நிலை காவலர் சுதர்சன் ஆகியோரும் உடன் சென்று இருந்தனர்.  ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ஜெயத்ரன் தாலுக்கா ராமாவாஸ் கிராமம் தான் பயங்கர கொள்ளையன் நாதுராமின் சொந்த ஊர் ஆகும்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள செயல்படாத தொழிற்சாலை கட்டிடம் ஒன்றில் பதுங்கி இருந்த நாதுராமை பிடிக்க ஆய்வாளர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் ஆகியோர் தங்களுடன் வந்திருந்த 3 போலீசாருடன் சுற்றி வளைத்தனர்.  இந்நிலையில், ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆய்வாளர் பெரியபாண்டியனை ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியால் தான் சுட்டுள்ளனர் என்றும், சுட்டது கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் சென்னை நகர உயர்போலீஸ் அதிகாரிகள் கூறினர். ஆனால், அந்த கொள்ளையன் யார்? என்பதை வெளியிடவில்லை.

இந்த நிலையில், பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி குண்டு என ராஜஸ்தான் காவல்துறை  தெரிவித்தது. பெரிய பாண்டியனை காப்பாற்ற முயன்றபொழுது தவறுதலாக முனிசேகர் சுட்டுள்ளார் என பாலி மாவட்ட எஸ்.பி. கூறினார்.

இதனைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அஜாக்கிரதையாக இருந்ததன் மூலம் உயிரிழப்பு ஏற்படுத்தியதன் கீழ் முனிசேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆய்வாளர் பெரியபாண்டியனை காப்பாற்ற முயற்சித்தபோது முனிசேகர்தான் தவறுதலாக சுட்டது உறுதியாகியுள்ளது. ஆய்வாளர் முனிசேகர் தவறுதலாக சுட்டதாகச் சென்னை போலீசார் இன்று உறுதிப்படுத்தினர். முனிசேகர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விசாரணைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என தமிழக காவல்துறை கூறி உள்ளது.

Newsletter

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...