திருமாவளவனின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற பாஜகவினர் - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

கோவை, டிசம்பர் 11

சட்டம், ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் பேசியதாகக் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் உருவ பொம்மையை பாஜகவினர் எரிக்க முயன்றதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றம் ஏற்பட்டது.



பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6-ம் தேதியன்று, தலித் இஸ்லாமியர் எழுச்சி நாளாகவும், அம்பேத்கர் நினைவு தினமும் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, கடந்த வாரம் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்து கோயில்களை இடித்துவிட்டு புத்த கோயில்களைக் கட்ட வேண்டும் எனப் பேசியதாக செய்திகள் வெளியாகின. 

அவரின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உள்ளிட்ட இந்து கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆங்காங்கே கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே, திருமாவளவனின் பேச்சு இந்துக்களை அவமதிக்கும் செயல் எனவும், இந்துக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாகவும் கூறி பாரதிய ஜனதா கட்சி அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவினர், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது, அவர்கள் விசிக தலைவரின் உருவ பொம்மையையும் எரிக்க முயன்றனர். 

இதனைத்தொடர்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களிடமிருந்து உருவ பொம்மையை பறித்தனர். பின்னர், கண்டன கோஷங்களை எழுப்பிய பாஜக-வினர், சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் முயற்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் ஈடுபடுவதாகவும், மதக்கலவரத்தை உருவாக்கும் வகையில் அரசியல் செய்கிறார் எனவும் குற்றம்சாட்டினர். மேலும், திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...