ஓ.என்.ஜி.சிக்கு எதிராகப் போராட்டம்: பேராசிரியர் ஜெயராமன் குடும்பத்தினருடன் மீண்டும் கைது

டிசம்பர் 11

ஓ.என்.ஜி.சிக்கு எதிராகப் போராட பொதுமக்களைத் தூண்டி விடுவதாகப் பேராசிரியர் ஜெயராமன், மனைவி மற்றும் மகன்களுடன் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் வயல்களில் எண்ணைக் குழாய் பதித்து மீத்தேன், ஷேல் கியாஸ் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. இதனால், அப்பகுதி விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு குடிநீர் மற்றும் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, தஞ்சை மாவட்டத்தில் கதிராமங்கலம், திருவாரூர் மற்றும் நன்னிலம் பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணைக் குழாய் பதிக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. இதில், அடிக்கடி கசிவு ஏற்பட்டு கச்சா எண்ணை வயலில் பரவி, நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டது. இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களில் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் கிராமமக்கள் ஈடுபட்டனர். இதனால், ஜெயராமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயராமன் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால், அவர் தொடர்ந்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நன்னிலம் பகுதியில் தீயணைப்பு நிலையத்துக்குப் பின்புறம் தென்னஞ்சார் என்ற இடத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழ்குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இதையொட்டி, ஏராளமான கனரக வாகனங்கள் அங்கு வந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைக் கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் இப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, பொதுமக்களுடன் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தார் நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. 

இந்நிலையில், மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் அப்பகுதி மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், பணிகளைத் தடுத்து நிறுத்தவும், நாம் தமிழர் கட்சியினர் இன்று நடத்தவிருந்த முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்கவும் அங்கு வந்துள்ளார். இதையறிந்த நன்னிலம் போலீசார், பேருந்துநிலையம் பகுதிக்கு மனைவி சித்ரா மற்றும் மகன்களுடன் பேராசிரியர் ஜெயராமன் வந்தபோது அவரைத் தடுத்து நிறுத்தினர். அப்போது, அங்கு நின்றிருந்த கிராமமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிராக போராட மக்களை தூண்டுவதாகக் கூறி பேராசிரியர் ஜெயராமனை மீண்டும் போலீசார் கைது செய்தனர். அப்போது, உடனிருந்த அவரது மனைவி சித்ரா, மகன்கள் இளம்பரிதி, அருள் ஆகியோரையும் போலீசார் கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...