உதகை மலை ரயிலில் திடீர் கோளாறு : அடிப்படை வசதிகளின்றி வனப்பகுதியில் பரிதவித்த சுற்றுலாப் பயணிகள்

டிசம்பர் 09

குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை ரயிலின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறால், நடுவழியில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் சுற்றுலா பயணிகள் பரிதவித்தனர். 

பாரம்பரிய சின்னமாக உள்ள நீலகிரி மலை ரயில், யுனெஸ்கோ அந்தஸ்து பெற்றுள்ளது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகிறன்றனர். மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னுார் வரை பழமை மாறாத பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின் மூலம் நான்கு பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 7:20 மணிக்குப் புறப்பட்டு குன்னுாரை 10:30 மணிக்கு வந்து அடைகிறது. 



இந்த நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்ட மலை ரயில் ஹில்குரோவ் அருகே வந்தடைந்ததது. அப்போது, மீண்டும் அங்கிருந்து புறப்பட்ட போது, திடீரென என்ஜினில் இருந்து புகையும், நெருப்பும் கிளம்பியது. இதனால், என்ஜன் டிரைவர் ரயிலை இயக்காமல், சாதுர்த்தியமாக அங்கேயே நிறுத்தினார். பின்னர், குன்னுார் ரயில் நிலையத்திற்குத் தகவல் கொடுத்து, அங்கிருந்து மாற்று என்ஜன் அப்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டது. 



இதனைத்தொடர்ந்து, மலை ரயில் நடுக்காட்டில் நின்றதால் 143 சுற்றுலாப் பயணிகள் உணவு தண்ணீர் இன்றி தவித்தனர். மேலும், என்ஜினில் அதிக வெப்பம் ஏற்பட்டதால் என்ஜினிலிருந்து புகைமூட்டமும், தண்ணீரும் வெளியேறியது. இதனால், லோகோ பைலட் பூபதி, உதவி லோகோ பைலட் சதீஷ் மற்றும் ஜெனரேட்டர் ஆப்‌ரேட்டர் வினோத் ஆகியோருக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும், நீராவித் தண்ணீர் மேல்பட்டதில் மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு 10.30 மணிக்கு வரவேண்டிய மலைரயில், மாற்று என்ஜின் மூலம் பிற்பகல் 2.30 மணிக்கு வந்தடைந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...