உலக அளவில் தாஜ்மஹாலுக்கு 2-வது இடம்

டிசம்பர் 6

யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்களுக்கான பட்டியலில் இந்தியாவில் உள்ள தாஜ்மஹாலுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. 

ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பானது உலகின் பல்வேறு புராதன நகரங்களையும், சின்னங்களையும் பார்வையிட்டு அவற்றைப் பழமை வாய்ந்த புராதன சின்னமாக அறிவித்து வருகிறது.

இந்த நிலையில், தனியார் நிறுவனம் ஒன்று ஆன்லைனில் உலகளவில் யுனெஸ்கோ கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரிய இடங்கள் குறித்த கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில், இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தை கம்போடியா நாட்டில் உள்ள அங்கோர்வாட் கோவில் பிடித்துள்ளது. மேலும், இந்த பட்டியலில் சீன பெருஞ்சுவர், பிரேசிலில் உள்ள இஹாஷு தேசிய பூங்கா, உள்ளிட்ட பல இடங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்திய அரசின் புள்ளி விவரப்படி, இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளில் நான்கில் ஒருவர் தாஜ்மஹாலை பார்வையிடுவதாகவும், அதேநேரத்தில் மற்ற உலக அதிசய தளங்களை ஒப்பிடும் போது தாஜ்மஹாலுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தாஜ்மஹாலுக்கு ஆண்டிற்குச் சராசரியாக 80 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள குஜராத் மாநில தலைநகர் ஆமதாபாத்தை புராதன நகரமாக யுனெஸ்கோ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...