பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் நியாமான தீர்ப்பை வழங்க வலியுறுத்தி ரயில் நிலைய முற்றுகையில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியனர் கைது

கோவை, டிசம்பர் 6

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் நியாமான தீர்ப்பை வழங்க வலியுறுத்தி ரயில் நிலைய முற்றுகையில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியனர் கைது செய்யப்பட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று இந்தியாவின் கறுப்பு தினமாக முஸ்லீம் அமைப்பினர் அனுசரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் நியாமன தீர்ப்பை நீதித்துறை வழங்க வேண்டும் என்று வலியிறுத்தி மனித நேய ஜனநாயக கட்சியினை சேர்ந்தவர்கள் கோவை ரயில் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். 



இது தொடர்பாகமனித நேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 25 ஆண்டுகளாக நீதிகிடைக்க மக்கள் காத்திருக்கின்றனர். இந்த வழக்கில் அயோத்தியில் உள்ள அந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பதை ஆய்வு செய்து நியாயமான தீர்ப்பை தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும். 

வழக்கு நிலுவையில் உள்ள போதே பி.ஜே.பி.யின் நட்பு அமைப்புகள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என பரப்புரை செய்து வருகின்றனர்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் ரயில் நிலையம் அருகே சுமார் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Newsletter

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...