அதிக கட்டணம் வசூலிக்கும் மாநகராட்சி கட்டணக் கழிப்பிடம்- நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்

கோவை, டிசம்பர் 4

காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை, காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சியின் கட்டண கழிப்பிடம் குத்தகைதாரர் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் சார்பில் சிறுநீர், மலம் கழிக்க ரூ. 1 மற்றும் குளிக்க ரூ. 3 என வசூலிக்க வேண்டும் என அதன் அருகிலேயே அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதனை குத்தகைக்கு எடுத்துள்ள நபரோ மாநகராட்சி நிர்ணயித்துள்ள விலை பட்டியலை ஒரு அட்டையினைக் கொண்டு மறைத்து, அதற்கு மாற்றாக அதிகப்படியான தொகையை வசூலித்து வருகிறார். அதாவது, சிறுநீர் கழிக்க மட்டும் 5 ரூபாய் இங்கு வசூல் செய்யப்படுகிறது.



இதுகுறித்து, அங்கு பணியில் அமர்த்தப்பட்டிருந்த நபரிடம் கேள்வியெழுப்புகையில், "மாதம் 12 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும். மாநகராட்சி நிர்வாகமா அதனை செலுத்தும். இவ்வாறு அதிகத் தொகை வசூலித்தால் மட்டுமே அதனை செலுத்த முடியும். வேண்டுமென்றால் பயன்படுத்துங்கள், இல்லையென்றால் சாலையோரம் சென்று சிறுநீர் கழித்துக் கொள்ளுங்கள்" என்றார் கடும் கோபத்துடன்.

வாரம் தவறாமல் "அதிக தொகை வசூலித்த கட்டணக் கழிப்பிட குத்தகைதாரர் மீது நடவடிக்கை" என மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில் இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...