கனமழையால் உதகை ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே உள்ள கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 3 பேர் பலத்த காயம்

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே இருந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.



நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் மரங்கள் விழுந்தன. மழை காரணமாக ஏற்பட்ட கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, குன்னூர். கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகக் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கடும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்து வந்த நிலையில், நேற்று காலை முதல் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஊட்டி, கோத்தகிரி போன்ற பகுதிகளில் சில இடங்களில் மின் கம்பங்கள் மீது மரங்கள் மற்றும் மரக்கிளைகள் விழுந்ததால், மின்தடை ஏற்பட்டது.    



இந்நிலையில், இன்றும் பெய்து வரும் கனமழையால், உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே இருந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால், ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் 3 பேர் சிக்கிக் கொண்டனர். நீண்டநேரப் போராட்டத்திற்கு பிறகு, அவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும், அதில், 2 பேரின் நிலைக் கவலைக்கிடமாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரும்பாலும், இடிந்து விழுந்தக் கட்டிடத்தில் உள்ள டீக்கடையில் தேநீர் அருந்துவது வழக்கம். இன்று சனிக்கிழமையை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகம் விடுமுறை என்பதால், பொதுமக்களின் வருகை குறைவாகவே இருந்தது. இதனால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. 



மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியான சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால், நேற்று போக்குவரத்து கோத்தகிரி வழியே திருப்பி விடப்பட்டது. சாலைகளைச் சீர் செய்யும் பணிகள் இன்னும் நிறைவடையாததால், 2-வது நாளாகப் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. 



மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இருப்பினும் ,கோளாறு சரிசெய்யாததால், ஊட்டி, குன்னூர். கோத்தகிரி, மஞ்சூர் ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்தப் பொதுமக்கள் தொடர்ந்து மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 



நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் இன்றும் இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் சோதனை மேற்கொண்ட பின்னர், மீண்டும் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...