பணி நியமன விவகாரம் : கண்களில் கருப்பு துணி கட்டி மூன்றாவது நாளாக மருத்துவ மாணவர்கள் போராட்டம்

கோவை, டிசம்பர் 1

மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிய அரசுசாரா மருத்துவர்களை நேரடியாக அரசு மருத்துவக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிய அரசுசாரா மருத்துவர்களை நேரடியாக தேர்வை செய்ததின் மூலம், அனுபவமுள்ள அரசு மருத்துவர்களுக்கும் , அரசு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் கிடக்க வேண்டிய வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

முறையாக கலந்தாய்வு நடத்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தாலுக்கா மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட வேண்டிய நிலையில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நேர்முகத் தேர்வு நடத்தி அரசு சாரா மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரி முதுகலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கோவையில் நவம்பர் 29-ம் தேதி தொடங்கிய இந்த போராட்டத்தில் அரசு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், அரசுடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கப்பெறாததால் நேற்று நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் வாயில் பிளாஸ்திரி அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 



ஆனால், தமிழக அரசிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கப்பெற வில்லை. இந்த நிலையில், அரசு இந்த பிரச்சனையில் மவுனம் சாதிப்பதை கண்டிக்கும் விதமாக முதுகலை மருத்துவ மாணவர்கள் மூன்றவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று மதியம் முதல் மாணவர்கள் கண்களில் கருப்பு துணி கட்டியும், மனித சங்கிலி போராட்டம் மூலமாகவும் அரசுக்கு கண்டனங்கள் தெரிவித்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...