ஆர்.கே. நகர் தொகுதி அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிப்பு

நவம்பர் 30 

ஆர்.கே. நகர் தொகுதி அதிமுக வேட்பாளராக மதுசூதனன் ஆட்சி மன்ற குழுவால் ஒருமனதாகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

வரும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 28 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். அதிமுக அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன், முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச்செயலாளர் தமிழ் மகன் உசேன், தென்சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் ஆதிராஜாராம், வடசென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், 42-வது வார்டு முன்னாள் உறுப்பினர் அஞ்சுலட்சுமி, 1996-ல் ஆர்.கே.நகரில் போட்டியிட்ட ஆர்.எம்.டி.ரவீந்திரஜெயன், 2016 தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட நூர்ஜகான் உள்ளிட்டோரும் மனு கொடுத்துள்ளனர். 

இதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக நிர்வாகிகளிடம் கடும் போட்டி ஏற்பட்டு நிலவியது. எனவே, வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காகச் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, வேலுமணி மற்றும் மதுசூதனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆட்சிமன்றக் குழுவை சேர்ந்த 8 பேர் கலந்து கொண்டுள்ளனர். ஜஸ்டின் செல்வராஜ் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தில் ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசித்தனர். 

சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த ஆலோசனையில் மதுசூதனன் ஆட்சிமன்றக் குழுவால், ஆர்.கே. நகர் வேட்பாளராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆர்.கே.நகர் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டசபை தொகுதியை அதிமுகவின் கோட்டை என்றே கூறலாம். இதுவரை அங்கு நடைபெற்ற 9 சட்டசபை தேர்தல்களில் 5 முறை அதிமுக வெற்றி பெற்று உள்ளது. திமுகவும், காங்கிரசும் தலா இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளன. அதிலும், கடந்த மூன்று சட்டசபை தேர்தல்களிலும் அதிமுகவே தொடர்ச்சியாக வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...