நபிகள் நாயகம் பிறந்தநாளையொட்டி டிச., 2-ம் தேதி மதுக்கடைகள் மூட உத்தரவு

கோவை, நவம்பர் 29

நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு வரும் டிச.,2-ம் தேதி கோவை மாவட்டத்தில்  உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

மிலாடி நபியை முன்னிட்டு, தமிழக அரசு வரும் டிசம்பர் 2-ம் தேதி பொதுவிடுமுறையை அறிவித்துள்ளது. இந்த நிலையில்,  அன்றைய தினம் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள் மற்றும் பொழுதுபோக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்டவிதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...