உள்ளாட்சித் துறையில் இலஞ்சப் புகார்கள் அதிகரித்து வருகின்றன, மத்திய அரசு திட்டங்கள் செயல்படுத்துவதில் மெத்தனம்: பாஜக தேசிய செயலாளர் கடும் கண்டனம்

கோவை, நவம்பர் 29

ஒராண்டு காலமாக உள்ளாட்சித் துறையில் இலஞ்சப் புகார்கள் அதிகரித்து வருகின்றனர். தமிழகத்திற்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பணத்தை கொட்டிக் கொடுக்கின்றது. ஆனால், கோவையில் இதுவரை ஸ்மார்ட் சிட்டிக்கான தலைமை அதிகாரி கூட நியமனம் செய்யப்படவில்லை என்று தன் கண்டனத்தை பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் இன்று பேசுகையில், கூறியதாவது:



 தமிழகத்திற்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பணத்தை கொட்டிக் கொடுக்கின்றது. ஆனால், கோவையில் இதுவரை ஸ்மார்ட் சிட்டிக்கான தலைமை அதிகாரி கூட நியமனம் செய்யப்படவில்லை. தமிழக அரசு, மத்திய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்த ஆவண செய்ய வேண்டும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் கழிவறை திட்டம், வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் உதவிகளை வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். கடந்த ஒராண்டு காலமாக உள்ளாட்சித் துறையில் இந்த லஞ்சப் புகார்கள் அதிகரித்து வருகின்றனர். சம்மந்தப்பட்ட அமைச்சர் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்து அறநிலைத்துறையின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. சென்னை பாம்பன்சாமி திருக்கோவிலுக்கு பல ஆண்டுகளாகத் தீபம் காட்டவில்லை. இதனால், சென்னையில் வெள்ளம் வந்து நாசமாகப் போகின்றது. சென்னை பாம்பன்சாமி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்தாலும் கோவிலில் பூஜை ஏன் நிறுத்தப்பட்டது. இந்து அறநிலையத்துறை, துப்புக்கெட்ட நியாயமில்லாத துறையாக இருக்கின்றது. அர்ச்சகர்களுக்குச் சம்பளம் கொடுக்க பணம் இல்லாத போது செயல் அலுவலர்களுக்கு மட்டும் எதற்குச் சம்பளம் ?. 

மேலும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.  மாணவி ஹதியா விவகாரம் பற்றி கருத்துச் சொல்லவே விரும்பவில்லை. கன்னியாஸ்திரிகளை பற்றி யாரும் பேசாத போது, ஈசா மையத்தைப் பற்றி யாரும் பேச தேவையில்லை. கௌரி லங்கேஷ் கொலை விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புக் காரணம் எனச் சொல்லப்பட்ட நிலையில், தற்போது இஸ்லாமியர் கைது செய்யப்பட்டுள்ளார் இதை ஏன் ஊடகங்கள் பேசவில்லை.

கடலூரில் ஆனந்த என்ற இளைஞர் மீது விடுதலை சிறுத்தைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சி மேற்கொண்டு விட்டுத் தப்பி விட்டதாகத் தகவல் வருகின்றது. ஆனால், காவல்நிலையத்தில் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் எந்தவித பாரபட்சமின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.  இவ்வாறு கூறினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...