தொடர் கொலையில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கோவை, நவம்பர் 29

ஒரே இரவில் மூன்றுபேரைக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம், காரமடை அருகே புங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். சென்ட்ரிங் தொழிலாளியான இவர் குடும்ப வறுமையின் காரணமாக 2013 மார்ச் 28ம் தேதியன்று உறவினர் ஆனந்தகுமார் உடன் மது அருந்திவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இவரது நண்பரான வேலுசாமியிடம் (49) ஸ்ரீதர் செலவிற்கு பணம் கேட்டுள்ளார். வேலுசாமி பணம் தர மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் தான் வைத்திருந்த கத்தியால் குத்தி அவரை கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாயினை திருடி விட்டு தப்பினார்.

பின்னர் காரமடை கண்ணார்பாளையம் பிரிவு அருகே வந்த ஸ்ரீதர் அங்குள்ள பெட்டிக்கடையை உடைத்து பணம் திருட முயற்சித்த நிலையில், அதைக்கண்ட தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் காவலாளி ராஜேந்திரன் சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்கிற மாரியப்பன் இருவரின் சண்டையை விலக்க முயன்றுள்ளார். அப்போது அவரையும் ஸ்ரீதர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

தொடர்ந்து அங்கிருந்து காரமடை ரயில் நிலையம் அருகே சென்ற அவர் சாலையோரமாக இருந்த குடிசைக்குள் தலைமறைவாக முயற்சித்த நிலையில் குடிசைக்குள் இருந்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சேகர் கூச்சலிட்டுள்ளார். அவரையும் ஸ்ரீதர் கத்தியால் குத்தி கொலைசெய்துவிட்டு தப்பினார்.

ஒரே நாள் இரவில் மூன்று பேரை கொலை செய்த இச்சம்பவம், காரமடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் வேலுசாமி கொலை வழக்கு கோவை 5-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும், சேகர் மற்றும் ரமேஷ் கொலை வழக்கு தனித்தனியாக 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது.

இதில், ரமேஷ் கொலை வழக்கின் இறுதிகட்ட விசாரணை நீதிபதி விஜயா முன்னிலையில் நடந்தது. விசாரணையின் இறுதியில் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...