வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கும் போக்குவரத்து போலீசார்

கோவை, நவம்பர் 28

வாகன விபத்துகளை குறைக்கும் விதமாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாநகர போலீசார் வாகன ஓட்டிகளிடம் வினியோகித்தனர். 



கோவை மாநகரில் சாலை உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைக்க மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து காவல் நிலைய எல்லைகளுக்குள்ளும் உள்ள முக்கிய சந்திப்புகளுக்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை வினியோகித்து வருகின்றனர். 



நேற்று மாலை பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் பாபு துண்டு பிரசுங்களை வழங்கினார்.

 

அதே போல், இன்று காலை வெரைட்டிஹால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் S.முருகன் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். 

இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 

'இந்தியாவில் நடக்கும் மொத்த விபத்துக்களில் 12 சதவிகித விபத்துகள் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...