கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு காவலர் பலி

கோவை, நவம்பர் 28

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு காவலர் பலியானார். 

மதுரை மாவட்டம் உப்பிலிகுண்டு பகுதியை சேர்ந்தவர் ராமர் (39). கோவை மாநகர ஆயுதப்படையில் வாகன பிரிவில் காவலராக பணியாற்றி வந்த இவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாதுகாப்பிற்கான பணியில் ஈடுபட்டு வந்தார். திருமணமான இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில், காய்ச்சல் காரணமாக கடந்த 22-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் ராமர் அனுமதிக்கப்பட்டார். 

அவரது ரத்தமாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். 

தொடர்ந்து அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

ஆனால், சிகிச்சை பலனின்றி காவலர் இன்று காலை பரிதாபமாக பலியானார். 

கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 65-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...