திருப்பூர் அருகே ஒடும் ரயிலில் தீ விபத்து தவிர்ப்பு

திருப்பூர், நவம்பர் 28

கோவையில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி நோக்கி சென்றுகொண்டிருந்த ஓடும் ரயில் இன்ஜினில் திடீரென பயங்கர புகை கிளம்பியதால் பயணிகள் அதிர்ச்சி.

இந்த விபத்தில் ஓட்டுனர் ரயிலை ஈரோடு அருகே ரங்கம்பாளையத்தில் சாமர்த்தியமாக் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இன்று காலை கோவையில் இருந்து திருப்பதி நோக்கி புறப்பட்ட ரயில் காலை சுமார் 7.15 மணி அளவில் திருப்பூர் தாண்டி சென்றுகொண்டிருந்தது ..அதன்பின்னர் ரயில் ஈரோடு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது இன் ஜின் பகுதியில் இருந்து திடீரென் கடும்புகை கிளம்பிய அடுத்தத்துள்ள ரயில் பெட்டிகளில் பரவ ஆரம்பித்தது. 

இதனை கண்ட பயணிகள் கடும் அச்சத்தில் உறைந்தனர். நேரம் ஆக ஆக புகை தாக்கம் அதிகரிக்கவே இதனை கண்ட ஓட்டுனர் ரயிலை ஈரோடு அருகே ரங்கம்பாளையத்தில் சாமர்த்தியமாக் நிறுத்தினார். 

பின்னர் ரயில் சக்கரத்தில் இருந்து கிளம்பிய புகையை தீயணைப்பு கருவியை பயன்படுத்தி கட்டுப்படுத்தினார். இதனால் பெரும் தீவிபத்து தடுக்கப்பட்டதோடு பயணிகள் உயிர் தப்பினர். 

சுமார் 15 நிமிடம் தாமதமாக.ரயில் கிளம்பியது. இச்சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...