WHO KILLED RAGU? என்ற வாக்கியத்தை சாலையில் எழுதிய வாலிபர்களிடம் விசாரணை



கோவை, நவம்பர் 28

"WHO KILLED RAGU?" என்ற வாக்கியத்தினை சாலையில் எழுதிய வாலிபர்களிடம் பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த நவம்பர் 25-ம் தேதியன்று அதிகாலை பீளமேடு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரகுபதி (32) என்ற வாலிபர் உயிரிழந்தார்.

இந்த உயிரிழப்புக்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அதிமுக-வினர் அமைத்த அலங்கார நுழைவு வாயில் தான் காரணம் என்று திமுக-வினரும் பொதுமக்கள் பலரும் குற்றஞ்சாட்டிவந்த நிலையில், ஒரு வழிப்பாதையில் பயணித்த லாரியே விபத்துக்குக் காரணம் என்று போலீசார் விளக்கம் அளித்தனர்.

இந்த சூழ்நிலையில், ரகுபதி உயிரிழந்த மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகில் "WHO KILLED RAGU?" என்ற வாக்கியத்தினை சிலர் எழுதிச்சென்றனர். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த போலீசார் வருண் (26) மற்றும் பிரசாந்த் (27) என்ற இரு வாலிபர்கள் அந்த வாக்கியத்தினை எழுதியதாகச் சந்தேகித்து நேற்று இரவு இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இன்று காலையும் பீளமேடு காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பீளமேடு காவல் ஆய்வாளர் செல்வராஜ் கூறுகையில், "இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நபர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. சாலையில் வாக்கியம் எழுதியது யார்? எதற்காக எழுதினார்கள்? என்பது தொடர்பாக மட்டுமே விசாரிக்கிறோம்' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் இருவரும் சின்னியம்பாளையம் பகுதியில் ரகுபதி வீட்டின் அருகே வசிக்கும் பட்டதாரிகள்.

ரகுபதி உயிரிழந்த ஆதங்கத்தில் இவ்வாறு செய்துள்ளனர் என்றார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...