பழங்கால சிலைகளை பதுக்கியதாக மூன்று பேர் கைது

கோவை, நவம்பர்.24

கோவையில் பழங்கால சிலைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

பீளமேட்டை அடுத்த பிருந்தாவன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பழங்கால சிலைகள் மற்றும் அரிய பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பீளமேடு போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  தகவலின் பேரில் நேற்று இரவு அந்த வீட்டிற்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு இருந்த ஐம்பொன் சிலைகளான சரஸ்வதி, நாகதேவி சிலைகளைக் பறிமுதல் செய்தனர். 



மேலும், செம்பு வளையல்கள், செம்பு பாத்திரங்கள் மற்றும் 2 சங்கு உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்த 2 சூட்கேஸ்களையும் மீட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக, பீளமேடு  பகுதியைச் சேர்ந்த பசந்திரசேகரன் (48),பாலக்காடு மாவட்டம் வடக்காஞ்சேரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் (34) மற்றும் இடையர்பாளையம் சீனிவாசநகரைச் சேர்ந்த ஜெயபாண்டியன் (39) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

 

போலீசார் நடத்திய விசாரணையில் கைதான மூன்று பேரும் சிலைகள் மற்றும் பாரம்பரிய பொருட்கள் அனைத்தும் தங்கள் முன்னோர்கள் பயன்படுத்தியதாகவும், அவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, கைதான மூன்று பேரையும் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்துச்சென்றனர்.

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...