நீதிபதியைக் கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்

கோவை, நவம்பர் 23

கோவை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜவேலைக் கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 40-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில் 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் ராஜவேல் வழக்கறிஞர்களுடன் மோதல் போக்கினை கடைப்பிடித்து வருவதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கத்தில் முறையீடும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிபதியின் இத்தகைய நடவடிக்கையினைக் கண்டித்து இன்று நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கும் வரை அந்த ஒரு நீதிமன்றத்தை மட்டும் காலவரையின்றி புறக்கணிப்பது எனவும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனால் 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...