வாக்காளர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பள்ளி மாணவர்களுக்கான வினாடி, வினாப் போட்டி

கோவை, நவம்பர் 23

எதிர்கால வாக்காளர்களாகிய பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வினாடி வினாப் போட்டி நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியத் தேர்தல் ஆணையம், எதிர்கால வாக்காளர்களாகிய மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, 9 முதல் 12–ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வினாடி வினாப் போட்டியை நடத்துகிறது. கோவை மாவட்டத்தில் 53 அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 106 மாணவர்கள், மாவட்ட அளவிலானப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். 

இப்போட்டியில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், மாவட்ட அளவில் கௌரவிக்கப்படுவதுடன், சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள அனுப்பப்படுவர். அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தலா ஒரு பள்ளியிலிருந்து இரு மாணவர்கள் கலந்து கொள்ளும் மாநில அளவிலானப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள், தில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேசிய அளவிலான போட்டியில் வெற்றிபெறும் மாணவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் பரிசு வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...