ஆட்டிப்படைக்கும் கந்துவட்டிக் கொடுமையை தடுத்தாக வேண்டும் - நடிகர் கமல்ஹாசன்

நவம்பர் 23

விவசாயிகள் முதல் சினிமாக்காரர்கள் வரை ஆட்டிப்படைக்கும் கந்து வட்டிக் கொடுமையை தடுத்தாக வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

கந்துவட்டிக் கொடுமையால் நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், தயாரிப்பாளருமான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பிற்கு பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தனர். ஆனால், அண்மைக்காலமாக சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் நடிகர் கமல்ஹாசன் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். இதனை பலர் விமர்சனம் செய்ததுடன், சினிமாத்துறையில் நிலவி வரும் கந்துவட்டிக் கொடுமை குறித்து கமல் மவுனம் காப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். 

இந்த நிலையில், அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளதற்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், கந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும், நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள். என குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...