கந்துவட்டி பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் - நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தல்

கோவை, நவம்பர் 23:

கந்துவட்டி பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. இச்சம்பவம் தமிழ் திரையுலகின் நிலைமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. கந்து வட்டியினால் ஏராளமான தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கந்துவட்டி பிரச்சனைக்கு தீர்வுகாண அரசு தலையிட வேண்டும். கந்துவட்டி உள்ளிட்ட பிரச்சனைகளை தயாரிப்பாளர்கள் சங்கம் மூலமாக பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்போம். என்றார். 

தொடர்ந்து, பத்மாவதி திரைப்படம் தொடர்பாக நடிகை தீபிகா படுகோனேவின் தலைக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், எவ்வளவு மோசமான நாட்டில் வாழ்கிறோம் என்பதை இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது. பல மொழி, கலாச்சாரம் உள்ள ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சியினரே மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மாற்றம் வேண்டுமென அரசியலுக்கு வருவது தவறல்ல. நடிகர் கமல்ஹாசன் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே தவிர, குற்றச்சாட்டே கூறக்கூடாது என மிரட்டக்கூடாது. நான் அரசியலுக்கு வரமாட்டேன். குடிமகனாக வாழவே ஆசைப்படுகிறேன். இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்தார். 

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...