மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கு : நீதிமன்றத்தில் துணைக் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது போலீஸ்

நவம்பர் 22

மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட வழக்கில்  அங்கமாலி நீதிமன்றத்தில் துணைக் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். 

கேரளாவில் கடந்த பிப்ரவரி 17-ந்தேதி நடிகை பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில், அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.  இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றபத்திரிகையில் திலீப் 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டடிருந்தார்.  முதல் குற்றவாளியாக சுனில் என்கிற பல்சர் சுனில் இருந்தார். 

இந்த நிலையில், நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட வழக்கில் துணைக் குற்றப்பத்திரிகையை இன்று அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். இதில் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், திலீப்பின்   முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார். இந்தக் குற்றப்பத்திரிகையில் திலீப் உள்பட 14 குற்றவாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். 385 சாட்சிகள் மற்றும் 12 ரகசிய அறிக்கைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. 50 சினிமா உலக பிரமுகர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கில் பல்சர் சுனில், விஜேஷ், மணிகண்டன், வடிவாள் சலீம், மார்ட்டீன், பிரதீப், சார்லி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...