போயஸ் கார்டனில் வருமான வரி சோதனை நிறைவு - ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த அனுமதி மறுப்பு

நவம்பர் 18: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் இல்லத்தில் 4 மணி நேரம் நீடித்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த, சசிகலா தரப்பினர் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கவில்லை.

போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் நேற்றிரவு வருமான வரித்துறையினர், அதிரடியாக சோதனை நடத்தினர். ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடப்பது குறித்த தகவல் தெரிந்ததும், இரவு 10:30 மணிக்கு ஜெயா டிவி மேனேஜிங் டைரக்டர் விவேக் அங்கு சென்றுள்ளார். சுமார் நான்கு மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. அதிகாலை சுமார் 2 மணியளவில் சோதனை நிறைவு பெற்றது. இந்நிலையில், ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த அனுமதிக்கவில்லை என விவேக் தெரிவித்தார்.

சோதனைக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெயலலிதா வாழ்ந்த வீடு கோவில் போன்றது. இங்கு சோதனை நடத்தியது வேதனை அளிக்கிறது. ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த நாங்கள் அனுமதிக்கவில்லை. சில கடிதங்கள், 2 பென் டிரைவ், ஒரு லேப்டாப்பை அதிகாரிகள் எடுத்து சென்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதற்கு அதிமுக.,வினர் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், இன்று (நவ., 18) காலை முதல் போயஸ் கார்டன் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிர சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகே அப்பகுதியில் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.

வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், திடீரென போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளதால் போயஸ் கார்டன் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...