காவல்துறை குறைதீர்ப்பு முகாமில் 1,242 போலீசார் பங்கேற்பு


கோவை, நவம்பர் 18: மேற்குமண்டல காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.



தமிழக காவல்துறை இயக்குனர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த குறைதீர்ப்பு முகாமில் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய எட்டு மாவட்டங்கள் மற்றும் சிறப்பு காவல்படையை சேர்ந்த 1,242 போலீசார் கலந்து கொண்டனர். இவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி டி.ஜி.பி.யிடம் அளித்தனர்.



மனுக்களில், இடமாறுதல், பதவி உயர்வு, வழங்கப்பட்ட தண்டனைகளில் இருந்து நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

இந்த குறைதீர்ப்பு முகாமிற்கு கோவையில் இருந்து மட்டும் 510 போலீசார் கலந்து கொண்டனர். மேலும், திருப்பூரில் இருந்து 210 பேரும், நீலகிரியில் இருந்து 110 காவலர்களும் கலந்து கொண்டு மனு அளித்தனர்.



மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி. ராஜேந்திந்திரன் தெரிவித்தார்.



இந்த முகாமில் கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா மற்றும் மேற்குமண்டல காவல்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...