டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை, நவம்பர் 14

அன்னூரில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து சுகாதார சீர்கேட்டினை கண்டுகொள்ளாத அதிகாரிகளே இதற்குக் காரணம் என கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளியான குணசேகரன் என்பவரது மகன் சுதர்சன் (14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்துவந்தார்.

கடந்த சனிக்கிழமையன்று காலை சுதர்சன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சாதாரண காய்ச்சலுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் காய்ச்சல் குணமடையாததால் ஞாயிறன்று மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரின் இரத்த மாதிரிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதில், டெங்கு வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் உடல்நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சிறுவன் உயிரிழந்தார்.

இதனிடையே, டெங்குவால் பள்ளி மாணவன் உயிரிழந்ததை அறிந்த ஊர்மக்கள் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்தனர். பின்னர் தங்கள் கிராமத்தில் நிலவும் சுகாதார சீர்கேட்டினை சீர்படுத்த அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்பதாலேயே சிறுவன் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டிய கிராம மக்கள் மற்றும் சிறுவனின் உறவினர்கள் திடீர் என அப்பகுதி வழியாக வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் சுகாதார பணிகளை உடனடியாக முடுக்கி விடுவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...