உடுமலை அருகே ஐந்தரை லட்சம் கொள்ளை

திருப்பூர், நவம்பர் 13

உடுமலை அருகே அதிகாலையில் மளிகைகடையின் பூட்டை உடைத்து ஐந்தரை லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை..

தொடரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பெரியக்கோட்டை பிரிவில் மளிகை கடை நடத்தி வருபவர் சாந்தி (50) இவர் நேற்று வழக்கம் போல் கடையில் வியாபாரத்தை முடித்து கொண்டு இரவு வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்  இன்று காலையில் வழக்கம் போல் கடையை திறக்க முற்படும் போது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே அருகில் இருந்தவர்களிடம் சாந்தி கேட்ட போது அதிகாலையில் இரண்டு மேற்பட்ட நபர்கள் கடையின் பூட்டை உடைத்து திருடி விட்டு தப்பி சென்றதை பார்த்து டீ கடையில் பணி புரிந்த ஊழியர்கள் அவர்களை துரத்தியும் அவர்களை பிடிக்க முடியவில்லை என டீ கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

 

இதற்கிடையில்  சம்பவம் குறித்து உடுமலை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

கடந்த சில நாட்களுக்கு முன் வங்கியில் விவசாயிடம் நூதன முறையில் பணம் கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் நடந்து இருக்கும் தருவாயில் இக் கொள்ளை சம்பவம் நடந்து இருப்பதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

சேமித்து வைத்து இருந்த ஜந்தரை லட்சம் அதிகாலையில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்வம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காவல் துறையினர் கூடுதலாக இப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Newsletter

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...