காட்டு யானைகளால் விவசாய நிலம் பாதிக்கப்படுவதாக ஆட்சியரிடம் புகார்

கோவை, நவம்பர் 13

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அவ்வப்போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் முகாமிட்டு பயிர்களை சேதம் செய்து வருவதாகத் தொடர்ந்து விவசாயிகள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் காட்டு யானைகளால் பாதிக்கப்பட்ட சிறுமுகை பகுதி விவசாயிகள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், 'சமீப காலமாக காட்டு யானைகள் மற்றும் பன்றிகள் அதிகளவில் விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன . இதுதொடர்பாக பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பெரிய அளவில் போராட்டம் நடத்தவுள்ளோம்' எனத் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...