கேஎம்சிஎச் புற்று நோய் மையத்தின் 6-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை, நவம்பர் 12

கேஎம்சிஎச் புற்றுநோய் மையத்தின் 6-ஆம் ஆண்டு விழா இன்று புற்று நோயிலிருந்து குணமடைந்த 300 நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கொண்டாடப்பட்டது.

கேஎம்சிஎச்-யின் புற்றுநோய் மையம் கடந்த 2011-ம் ஆண்டு துவங்கப்பட்டு, தற்போது புற்றுநோய் மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகியவற்றுடன் வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், இங்கு கதிரியக்க சிகிச்சை, ஆழமான காயம் தவிர்க்கும் எந்திர அறுவை சிகிச்சை, கீமோ சிகிச்சை, பாதிக்கப்பட்ட உடற்பகுதிக்கு மட்டுமான சிகிச்சை, ஹேமட்டோ சிகிச்சை ஆகிய அனைத்துவகை மருத்துவங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாகக் கடந்த 6 ஆண்டுகளில், இந்த மையம் 20,000-க்கும் மேலான புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொண்டுள்ளது. 32000-க்கும் அதிகமானோர் கீமோ சிகிச்சைகளையும், 4000-க்கும் அதிகமானோருக்கு ரேடியோ சிகிச்சைகளையும் அளித்துள்ளது.

இதனிடையே, இன்று கேஎம்சிஎச் மருத்துவமனையில் புற்று நோய் மையத்தின் 6-ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற அம்மருத்துவமனைத் தலைவர் மருத்துவர் நல்ல ஜி. பழனிசாமி பேசுகையில், "புற்று நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும். அதேவேளையில், இரண்டாம் நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் வாழ்வு நாட்களையும் நீட்டிக்கச் செய்ய இயலும். வலி நிவாரணநிலை, ஆதரவு நிலை என்ற நிலையிலுள்ள நோயாளிகளுக்கும்கூட வாழும் தரத்தை மேம்படுத்த கேஎம்சிஎச் என்றும் முயற்சிக்கிறது.

சிகிச்சையைப் போலவே நோய்த் தடுப்பும் முக்கியம். தொடர்ந்து பொதுமக்களிடையே நோயைக் கண்டறியவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உதவி வருகிறது," என்றார்.

இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற 'கலைமாமணி' திரு. மரபின்மைந்தன் முத்தையா, புற்றுநோயிலிருந்து மீண்டவர்களிடம் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...