குளக்கரையில் கட்டிடக் கழிவுகளை கொட்டியவர்களுக்கு அபராதம்


கோவை, நவம்பர் 10

நகரின் பல்வேறு இடங்களில் உள்ள நீர் நிலைகளில், ப்ளாஸ்டிக் குப்பைகளோடு கட்டிடக் கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால், நீர் ஆதாரங்கள் மாசடைந்து சுகாதாரமற்ற சூழல் உருவாகி வருகின்றது.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் இ.எப்.ஐ போன்ற தன்னார்வ அமைப்புகள் குளங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைக் கழிவுகளை தொடர்ந்து அகற்றுவதோடு, பொதுமக்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், இன்று காலை குமாரசாமி குளத்தை அடுத்துள்ள கிருஷ்ணாம்பதி குளக்கரையில் கட்டிடக் கழிவுகளை கொட்டியவர்களையும் அவர்களின் வாகனத்தையும் தடுத்தி நிறுத்திய தன்னார்வலர்கள், மாநகராட்சி நிர்வாகத்திடம் அவர்களை ஒப்படைத்துள்ளனர்.

பின், மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையர், வாகன உரிமையாளரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிப் பெற்றுக் கொண்டு, ரூபாய் 5000 அபராதம் விதித்து வாகனத்தை விடுவித்துள்ளார்.



மேலும், கொட்டப்பட்ட கட்டிடக் கழிவுகளும் குளக்கரையிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.

இதுபற்றி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் கூறியதாவது, 'செங்கல், இரும்புக் கம்பிகள் மற்றும் சிமெண்ட் கான்க்ரீட் போன்ற கட்டிடக் கழிவுகள் குளங்களில் கொட்டப்படுவதால், நீரின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு சுற்றுச் சூழல் மாசடைகிறது. இந்த பிரச்சனை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, கட்டிடக் கழிவுகளை மறுசுழற்ச்சி செய்யும் வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் விரைவாக உருவாக்கித் தர வேண்டும்.' என்று கேட்டுக்கொண்டார்.



கடந்த ஜனவரி மாதம், உக்கடம் பேருந்து நிலையம் அருகே, சுமார் 15 ஏக்கர் பரப்பளவில், 9 கோடி ரூபாய் செலவில், 100 டன் அளவிற்கு கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திறன் கொண்ட ஆலை அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.

ஆனால், அந்தப் பணிகள் வெறும் சுற்றுச்சுவர் எழுப்பியதோடு நிறுத்தப்பட்டுள்ளன. கட்டிடக் கழிவுகள் தொடர்ந்து குளங்களிலும், பொது நிலங்களிலும் கொட்டப்பட்டு வருகின்றன.

Newsletter

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...